ஈழத் தமிழருக்கு ஆதரவாக பரப்புரைப் பயணம்!

செவ்வாய், 18 நவம்பர் 2008 (16:56 IST)
ஈழத் தமிழர்களின் துயரத்தை விளக்கியும், அவர்களுக்கு ஆதரவாக மத்திய அரசு தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஒரு பரப்புரை பயணம் துவங்கியுள்ளது.

சென்னை இராயப்பேட்டை, வி.எம். தெருவிலிருந்து டாக்டர் எழிலன் தலைமையில் 18 பேர் கொண்ட குழுவினர் இப்பரப்புரை பயணத்தை துவங்கினர்.

“தமிழக மக்களின் ஆதரவு எழுச்சியைக் கொண்டு ஈழத் தமிழர் உரிமை மீட்போம், இது நம் மீது சுமத்தப்பட்டுள்ள வரலாற்றுக் கடமை” என்ற முழக்கத்துடன் துவங்கியுள்ள இந்தப் பயணத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலர் திருமாவளவன், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி, ஈழத்துப் பாவலர் காசி ஆனந்தன், திராவிட பெரியார் மார்க்ஸிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன், பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை
இராஜேந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இந்தப் பரப்புரைப் பயணம் அடுத்த மாதம் 2ஆம் தேதிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்