கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கரூர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளாத மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவை கண்டித்தும், பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் கரூர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் 18ஆம் தேதி லாலாப்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.