இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அண்மையில் சட்டக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் உருவாக்கியுள்ளது.
மாணவர்கள் மத்தியில் சாதி, இன அடிப்படையில் எழும் சிறுசிறு பிரச்சினைகளில் வெறி உணர்ச்சியைத் தூண்டிவிடும் போக்கு அறவே ஒழிக்கப்பட வேண்டும். உண்மைக்கு மாறாக சாதி மற்றும் மதச்சாயம் பூசும் அநாகரீக அரசியல் செயல்பாடுகளை கைவிட வேண்டும்.
அரசியல் தலைவர்கள் இதுபோன்ற நேரங்களில் கூடுமான வரையில் கட்சித் தலைவர்கள் என்ற முறையில் முன்னின்று பிரச்சனைகளில் சம்பந்தப்பட்டவர்களை அழைத்துப் பேசி சுமூகத் தீர்வு காண்பதுதான் சரியான செயல்பாடும், நமக்குள்ள கடமையுமாகும்" என்று தங்கபாலு கூறியுள்ளார்.