இலங்கை பிரச்சனை : ஆர்.எம்.வீரப்பன் வே‌ண்டுகோ‌ள்!

திங்கள், 17 நவம்பர் 2008 (15:07 IST)
இல‌ங்கை த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை‌யி‌ல் அனைவரு‌ம் இணைந்து ஒத்துழைப்பதுதான் பயன‌ளி‌க்கு‌ம் எ‌ன்று எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் கூறியு‌ள்ளா‌ர்.

இல‌ங்கை த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை‌யி‌ல் அடு‌த்தக‌ட்ட நடவடி‌க்கை எடு‌ப்பது கு‌‌றி‌த்து ஆலோ‌சி‌ப்பத‌ற்காக இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி சா‌ர்‌பி‌ல் செ‌ன்னை‌யி‌ல் அனை‌த்து‌க் க‌ட்‌சி கூ‌ட்ட‌ம் நடைபெ‌‌ற்று வரு‌கி‌றது.

இந்திய கம்யூனிஸ்டு க‌ட்‌சி‌யி‌ன் மாநில செயலர் தா.பாண்டியனுக்கு ஆ‌ர்.எ‌ம்.‌வீர‌ப்ப‌ன் அனுப்பியுள்ள கடிதத்தில், "இலங்கை தமிழர் பிரச்சனையில், ஒன்றுபட்ட முடிவுகள் மேற்கொண்டு முறைப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளும் முயற்சிகளை முதல்வர் கருணா‌நி‌தி தலைமையில் நடைபெற்று வருவதை அறிவீர்கள்.

இந்த முயற்சிகளுக்கு எல்லோரும் இணைந்து ஒத்துழைப்பதுதான் இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படக்கூடிய உரிய பயன்கள் ஏற்படும் என்று நம்புவதால் இதைப் போன்ற தனித்தனி முயற்சிகள் உரிய பயனை அளிக்காது என்று நம்புகிறேன்.

மேலும், இலங்கை தமிழர்களைப் பாதுகாக்கும் முயற்சியை மேற்கொள்ளும் தங்கள் கட்சி ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்ற தங்களின் ஆசையையும் வெளியிட்டுக் கொண்டிருப்பதால் தங்களின் இச்செயல் உரிய தகுதியை இயற்கையாகவே இழந்து விடுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்