மதுரை கலவர‌த்தை ‌‌விசா‌ரி‌க்க ஆய்வு குழு : தங்கபாலு அறிவிப்பு!

திங்கள், 17 நவம்பர் 2008 (14:58 IST)
மதுரை மாவட்டத்தில் அண்மைக்காலமாக உருவா‌கி வரு‌ம் ‌சி‌றிய கலவரங்கள் கு‌றி‌‌த்து ‌விசா‌ரி‌‌க்க தமிக காங்கிரஸ் சா‌ர்‌பி‌ல் ஆய்வு குழு அமை‌க்க‌‌ப்ப‌ட்டு‌ள்ளதாக அ‌க்க‌ட்‌சி‌‌யி‌ன் த‌மிழக தலைவர் கே.‌வி. தங்கபாலு அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை மாவட்டத்தில் அண்மைக்காலமாக சிற்சில கலவரங்கள் உருவாகி வருகின்றன. அது தொடர்பாக குறிப்பிட்ட அப்பகுதிகளுக்குச் சென்று அனைத்து பிரிவு மக்களையும் நேரில் சந்தித்து சமுதாய இன ஒற்றுமை உணர்வை உருவாக்கும் வகையில் ஓர் ஆய்வு அறிக்கை தயார் செய்து, உரிய ஆலோசனைகளோடு தமிழக அரசிடம் வழங்க தமிழக காங்கிரஸ் சார்பில் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஞானதேசிகன், சித்தன், ஆரூண், ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. பாரமலை ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 7 நாட்களுக்குள் அறிக்கை தயாரிப்பார்கள்.

தமிழகத்தின் அமைதிக்கு வழிவகுக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் ஏற்கும் இப்பணிக்கு இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மக்களும் காங்கிரஸ் குழுவிடம் நேரில் தங்களது கருத்துக்களை தெரிவித்து உதவ வே‌ண்டு‌‌ம்" எ‌ன்று கூறப்பட்டுள்ளது.