இது தொடர்பாக அதன் ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில், லோக்பரித்ரன், ஹேமச்சந்திரன், ரமேஷ், ஞானவேல் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு லட்சம் தமிழர்களை கொன்று குவித்த பிறகும் இனவெறி அடங்காமல் உலக சமாதானத்துக்கு சவால் விடுகிறது இலங்கை அரசு.
தமிழர்களை மனிதர்களாக மதிக்காமல் கொலை வெறியோடு இயங்கும் இலங்கை அரசின் அதிகார வெறியை கண்டித்து 'டி-ஷர்ட்' பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறோம். சென்னை தரமணி ஐ.டி. நெடுஞ்சாலையில் படித்த தமிழக இளைஞர்கள் அணிவகுத்து நிற்க முடிவு செய்து இருக்கிறோம். இந்த பிரசாரத்தை நடிகர்கள் சூர்யா, பிரகாஷ்ராஜ் துவக்கி வைக்கின்றனர்" என்று கூறப்பட்டுள்ளது.