ச‌ட்ட‌க்க‌ல்லூ‌ரி ‌பிர‌ச்சனை : கருணா‌நி‌தி மீது அவதூறு வழக்கு - ஜெயலலிதா!

திங்கள், 17 நவம்பர் 2008 (13:01 IST)
சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் பிரச்சனையில் தேவையில்லாமல் தன் மீது வீண்பழி சுமத்தும் வகையில் முத‌ல்வ‌ரகருணாநிதி பேட்டி அளித்துள்ளதாகவு‌ம், அதனா‌ல் அ‌வ‌ர் மீது தா‌ன் அவதூறு வழக்கு தொடர‌ப்போவதாகவு‌ம் அ.இ.அ‌‌.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது குற‌ி‌த்து அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவையில் பத்திரிக்கையாளர்களு‌க்கு பேட்டியளிக்கையில், கருணாநிதியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல்வதற்காகவே மாணவர்களின் இருசாரரையும் நான் தூண்டி விட்டு சண்டை போடசசெய்திருப்பதாக கூறியிருக்கிறார்.

சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் 12.11.2008 அன்று நடைபெற்றது காவல் துறையினரின் கணமுன்பு இருபிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் என்பதை தமிழக மக்கள் அனைவரும் அறிவர். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நடுநிலையாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் காவல் துறையினரின் வேடிக்கைப்பார்க்கும் போக்கைக் கண்டித்து கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். மாணவர்கள், வழக்கறிஞர்கள் என அனைவரும் இந்தச் செயலைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில், காவல் துறையின் மெத்தனத்திற்கு என்ன காரணம்? கல்லூரி முதல்வர் எங்கே தவறியிருக்கிறார்? இதனுடைய மொத்த விளைவு என்ன? மாணவர்கள் மத்தியிலே என்ன புகைந்திருக்கிறது? என்பதையெல்லாம் ஆய்ந்து அறிக்கை அளிக்க தி.மு.க. அரசால் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சண்முகம் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் இது குறித்து வேறு ஒருவர் தாக்கல் செய்த வழக்கில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் சூழ்நிலையில், ஒரு முத‌ல்வ‌ர் இது போன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கலாமா?

நீதிமன்ற விசாரணையில் உள்ள ஒரு பொருள் குறித்து முத‌ல்வர‌் கருணாநிதி நீதிமன்றத்திற்கு வெளியே கோயம்புத்தூரில் பேட்டி அளித்திருப்பதன் மூலம், விசாரணை ஆணையத்தின் முடிவு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நீதிபதிக்கு அறிவுறுத்துகிறாரோ என்ற சந்தேகம் தமிழக மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது. இது போன்ற பேட்டி நீதிமன்றத்தையும், புலனாய்வு அமைப்பையும் மிரட்டுவதோடு மட்டுமல்லாமல், வழக்கையே திசை திருப்புவதாக அமைந்து உள்ளது.

சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் பிரச்சினையில் தேவையில்லாமல் என் மீது வீண்பழி சுமத்தும் வகையில் பேட்டி அளித்துள்ள முத‌ல்வ‌ர் கருணாநிதியின் மீது நான் அவதூறு வழக்கு தொடருவேன்" எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.