ம‌த்‌திய அரசை வா‌ய் ‌தி‌ற‌க்க வை‌க்கு‌ம் போரா‌ட்ட‌ம் : தா. பா‌ண்டி‌ய‌ன்!

திங்கள், 17 நவம்பர் 2008 (11:15 IST)
இல‌ங்கை‌யி‌ல் போரை ‌நிறு‌த்த ம‌த்‌திய அரசை வா‌ய்‌‌திற‌க்க வை‌க்கு‌ம் போரா‌ட்ட‌த்தை அ‌றி‌‌வி‌க்க உ‌ள்ளதாக இ‌ந்‌‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மா‌நில‌ச் செயல‌ர் தா. பா‌ண்டிய‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இலங்கையில் போர் நிறுத்தம் கிடையாது என்று அந்நாட்டு அதிபர் ராஜபக்சே திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ‌விவா‌தி‌க்க அனைத்து கட்சி கூட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டியுள்ளது.

சென்னை தி.நகரில் உள்ள சாகித்தியன் ஓட்டலில் இன்று காலஇந்த கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொள்ளுமாறு அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

இ‌ந்‌நிலை‌யி‌ல், இல‌ங்கை‌‌த் த‌மிழ‌ர் ‌மீதான தா‌க்குதலை‌க் க‌ண்டி‌த்து நடிக‌ர் ‌விஜ‌ய் தனது ர‌சிக‌ர்களுட‌ன் செ‌ன்னை‌யி‌ல் நே‌ற்று உ‌ண்ணா‌விர‌த‌ம் இரு‌ந்தா‌ர். இ‌ந்த‌ உ‌ண்ணா‌விரத‌‌ப் போரா‌ட்ட‌த்‌தி‌‌ல் கல‌ந்து கொ‌ண்டு தா. பா‌‌்டிய‌ன் பேசுகை‌யி‌ல், "தமிழக அரசியல் கட்சிகள், கடந்த பல மாதங்களாக இந்திய அரசை இலங்கையிடம் கூறி போரை நிறுத்தச் சொல்லுங்கள் என கூறி வருகிறோம். மேலும், பிரதமரே உங்கள் வாயைத் திறந்து போரை நிறுத்த சொல்லுங்கள் என கேட்டோம்.

சட்ட‌ப்பேரவை‌யி‌ல் தீர்மானம் நிறைவேற்றிக் கேட்டோம். பல போரட்டங்கள் நடத்தினோம். இருந்தும் இந்திய அரசு வாய் திறக்கவில்லை. அதற்காகத்தான் அனைவரின் சார்பில் 2,000 மாணவர்களையும், மாநிலம் முழுவதிலிருந்தும் 25,000 மாணவர்களையும் டெல்லிக்கு அனுப்பி வைத்தோம்.

அங்கு சென்ற அவர்கள் 18 தேசிய மொழிகளிலும் போரை நிறுத்தச் சொல்லி குரல் எழுப்பினார்கள். இதற்கெல்லாம் வாய் திறவாத மத்திய அரசை வாய் திறக்க வைக்கும் போராட்டத்தை அறிவிக்க உள்ளோம்.

அதற்காகத்தான் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. வெற்றி முழக்கம் வரும் வரை அனைவரும் ஒற்றுமையுடன் நிற்க வேண்டும்" எ‌ன்று கூ‌றினா‌ர்.