வங்கக் கடலில் உருவாகியிருந்த `கைமுக்' எனப்படும் புயல் இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே காவலி என்ற இடத்தில் கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் வடக்கு கடற்கரையோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் ஆபத்து நீங்கியுள்ளது.
வங்கக் கடலில் நேற்று முன்தினம குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி புயலாக மாறியது. கைமுக் என பெயரிடப்பட்ட இந்த புயல் மசூலிப்பட்டினத்தில் இருந்து 270 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்ததால், நேற்று தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. சென்னையிலும் நேற்று மாலை முதல் விடிய விடிய மழைத்தூறல் விட்டு விட்டு நீடித்தது.
காற்றின் போக்கு காரணமாக இந்தப் புயல் திசைமாறி நெல்லூர் அருகே காவலி என்ற இடத்தில் இன்று அதிகாலை கரையைக் கடந்தது. இதனால் தமிழகத்திற்கு ஆபத்து நீங்கியிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடந்த போது ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.