நாகர்கோவில், நெல்லைக்கு சிறப்பு ரயில்கள்!

சனி, 15 நவம்பர் 2008 (09:54 IST)
சென்னையில் இருந்து நாகர்கோவில், நெல்லைக்கு கு‌‌ளி‌ர்கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " செ‌ன்னை எழு‌ம்பூ‌ரி‌ல் இரு‌ந்து நவ‌ம்ப‌ர் 23, 30, டிசம்பர் 7 ஆகிய தே‌திக‌ளி‌ல் இய‌க்க‌ப்படு‌ம் ‌சிற‌ப்பு ர‌யி‌ல் (எண் 0605) இரவு 11.45 மணிக்கு எழு‌ம்பூ‌ரி‌ல் இரு‌ந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு நெல்லை சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து நவ‌ம்ப‌ர் 24, டிசம்பர் 1, 8 ஆகிய தே‌திக‌ளி‌ல் இய‌க்க‌ப்படு‌ம் சிறப்பு ரயில் (எண் 0606) மாலை 3 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூ‌ர் வ‌ந்து சேரு‌ம்.

சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு நவ‌ம்ப‌ர் 19, 26, டிசம்பர் 3, 10 ஆகிய தே‌திக‌ளி‌ல் இய‌க்க‌ப்படு‌ம் சிறப்பு ரயில் (எண் 0607) எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு நாகர்கோவி‌ல் சென்று சேரும்.

மறுமார்க்கத்தில், நாகர்கோவிலில் இருந்து நவ‌ம்ப‌ர் 20, 27, டிசம்பர் 4, 11 மதியம் 1.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 0608) மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூ‌ர் வ‌ந்து சேரு‌ம்.

இதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து நவ‌ம்ப‌‌ர் 21, 28, டிசம்பர் 5, 12 ஆகிய தே‌திக‌ளி‌ல் இரவு 11.45 மணிக்கு நாகர்கோவிலுக்கும், நாகர்கோவிலில் இருந்து 22, 29, டிசம்பர் 6, 13 ஆகிய தே‌திக‌ளில இரவு 7.40 மணிக்கு சென்னைக்கும் குளிர்கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன" எ‌ன்று கூற‌ப்ப‌ட்ட‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்