கடல் கொந்தளிப்பு காரணமாக கடலோர குடிசை பகுதிக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம் புகுந்தனர். காரைக்காலில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் சுமார் 100 மீட்டர் அளவுக்கு தாழ்வான பகுதிகளில் கடல் நீர் புகுந்தது.
கடல் கொந்தளிப்பால் கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீனவர்களின் விசைப்படகுகள் கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
திருவொற்றியூர், அப்பா நகர், பெரியகுப்பம் பகுதிகளில் கடலோர குடிசைகள் கடலில் அடித்துச் செல்லும் நிலை ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் புதுச்சேரி அருகே கோட்டக்குப்பம், சின்னமுதலியார்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. கடல் சீற்றம் காரணமாக கடல் நீர் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது.
கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் யாரையும் கடலில் குளிக்கவோ, கடற்கரையில் உட்காரவோ காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.