மதுரை, கோவை‌க்கு சிறப்பு ரயில்கள்!

வெள்ளி, 14 நவம்பர் 2008 (10:28 IST)
பய‌ணிக‌ளி‌ன் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னையில் இருந்து மதுரை, கோவை இடையே சிறப்பு ரயி‌ல்க‌ள் இ‌ய‌க்க‌ப்பட உ‌ள்ளதாக தெ‌ற்கு ர‌யி‌ல்வே அற‌ி‌வி‌‌த்து‌ள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னையில் இருந்து மதுரைக்கு 15ஆ‌ம் தேதி இய‌க்க‌ப்படு‌ம் சிறப்பு ரயில் (வ.எண். 0631) எழும்பூரில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்ப‌ட்டு மறுநாள் காலை 9.30 மணிக்கு மதுரையை சென்றடையும்.

மறுமார்க்கத்தில், மதுரையில் இருந்து சென்னைக்கு 16ஆ‌ம் தேதி இய‌க்க‌ப்படு‌மசிறப்பர‌யி‌ல் (0632) மதுரையில் இருந்து இரவு 11.55 மணிக்கு புற‌ப்ப‌ட்டு மறுநாள் காலை 10.15 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையு‌ம்.

சென்னையில் இருந்து கோவைக்கு 14ஆ‌ம் தேதி இய‌க்க‌ப்படு‌மசிறப்பு ரயில் (0601) சென்னை சென்டிரலில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்ப‌ட்டு மறுநாள் காலை 7 மணிக்கு கோவையை சென்றடையும்.

மறுமார்க்கத்தில், கோவையில் இருந்து சென்னைக்கு 16ஆ‌ம் தேதி இய‌க்க‌ப்படு‌மசிறப்பு ரயில் (0602) கோவையில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்ப‌ட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்டிரல் ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது" எ‌ன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்