இல‌ங்கை த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை : நடிக‌ர் ‌விஜ‌ய் 16இ‌ல் உ‌ண்ணா‌விரத‌ம்!

வெள்ளி, 14 நவம்பர் 2008 (10:18 IST)
இலங்கை தமிழர்க‌ள் படுகொலையை க‌‌ண்டி‌த்து சென்னையில் வரு‌ம் 16ஆ‌ம் தேதி, ‌பிரபல த‌மி‌ழ் ‌திரையுலக நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் உண்ணாவிரத போரா‌ட்ட‌ம் நட‌த்து‌கிறா‌ர்.

இதுதொடர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "நடிகர் சங்கம் சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தின்போது நான் கேட்டுக்கொண்டபடி, இந்திய பிரதமருக்கு பல்லாயிரக்கணக்கான தந்திகளை கொடுத்து எனக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

தற்போது இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலையாவதும், பல ஆயிரக்கணக்கானவர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள வீடுகளை விட்டுவிட்டு குழந்தை குட்டிகளோடு காட்டுக்குள் பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்து தவிப்பதையும் கேள்விப்பட்டு இருக்கிறோம்.

இலங்கை தமிழ் சகோதர, சகோதரிகளின் படுகொலையை கண்டித்து, தமிழ் உணர்வை காட்ட வேண்டிய கட்டாயமும், நேரமும் வந்திருக்கிறது என்பதை உணர்ந்து, நம் நற்பணி இயக்கத்தின் சார்பில் ஒரு உண்ணாவிரத போராட்டம் நடத்த வேண்டும் என்று அனைவருமவேண்டுகோள் விடுத்து இருந்தீர்கள்.

வரும் 16ஆ‌ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நற்பணி இயக்கத்தினரோடு சென்னையில் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்து ஈழ தமிழர்கள் மீது நமக்கு இருக்கும் பரிவையும், பாசத்தையும் வெளிக்காட்ட நான் முடிவு செய்திருக்கிறேன். காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை உண்ணாவிரதம் நடைபெறும்.

சென்னையில் நடக்கிற அதே 16ஆ‌ம் தேதி தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களிலும், அத்தனை நகரங்களிலும் நீங்களும் உண்ணாவிரதம் இருந்து உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.

அத்தனை சகோதரர்களும், சகோதரிகளும் துயரத்தின் அடையாளமாக கறுப்பு துணியுடன் மவுனமாகவும், அமைதியாகவும், அறவழியிலும், அஹிம்சா வழியிலும் உணர்வுகளை பதிவு செய்ய வேண்டும். இதை அந்தந்த மாவட்ட தலைவர்களும், நகர, ஒன்றிய தலைவர்களும் பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறே‌‌‌ன்" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்