இலங்கை பிரச்சனை‌யி‌ல் ஒ‌ற்றுமையை க‌ட்டி‌க்கா‌ப்போ‌ம் : கருணாநிதி!

புதன், 12 நவம்பர் 2008 (15:40 IST)
இலங்கை த‌மிழ‌ர் பிரச்சனையில் அனைவரும் ஒற்றுமையாக இரு‌‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம், அ‌ங்கு போ‌ர் ‌நிறு‌த்த‌ம் ஏ‌ற்பட பிரதமர் ம‌ன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் நிச்சயம் உதவுவார்கள் எ‌ன்று‌ம் முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இல‌ங்கை அரசபோரை ‌நிறு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்றத‌மிழச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் ‌தீ‌ர்மான‌மகொ‌ண்டுவர‌ப்ப‌ட்டது. முத‌ல்வ‌ர் கருணா‌நித‌ி மு‌ன்மொ‌ழி‌ந்த இ‌ந்த ‌தீ‌ர்‌மான‌த்‌தி‌ன் ‌மீது உறு‌ப்‌பின‌ர்க‌ள் பே‌சின‌ர்.

பா.ம.க. சார்பில் ஜி.கே.மணியு‌ம், காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ் ம‌ற்று‌ம் அ.இ.அ.தி.மு.க. சார்பில் ‌எ‌தி‌ர்‌க்‌க‌ட்‌சி‌‌ துணை‌‌த் தலைவ‌ர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினார்கள்.

இதையடு‌த்து முத‌ல்வ‌ர் கருணாநிதி பே‌சுகை‌யி‌ல், பல்வேறு பிரச்சினைகளில் பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் தமிழன் என்ற நிலை வரும்போது அரசியல், கட்சி வேறுபாடுகளை மறந்து அனைவரு‌ம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் எ‌ன்றா‌ர்.

அவ்வாறு ஒ‌‌ற்றுமை‌யுட‌ன் இரு‌ந்தா‌ல் இலங்கை பிரச்சனை இந்த அளவுக்கு வந்திருக்காது எ‌ன்று‌ கூ‌‌றிய அவ‌ர், இந்த பிரச்சனையில் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம், ஒற்றுமையை கட்டி காப்போம் எ‌ன்று‌ம் வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்தா‌ர்.

மேலு‌ம், இந்த தீர்மானத்தை செயல்படுத்த பிரதமர் மன்மோகன் சிங்கும், மத்திய அரசின் வழிகாட்டியாக விளங்கும் சோனியா காந்தியும் நிச்சயம் உதவுவார்கள் எ‌ன்று‌ம் கூ‌றிய முத‌ல்வ‌ர் கருணாந‌ி‌தி, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது, அ‌ங்கு தமிழர்கள் அமைதியாக வாழ்கிறார்கள் என்ற ஒரு நிலையை அவர்கள் ஏற்படுத்தி தர வேண்டும் எ‌ன்று‌ம் கே‌ட்டு‌க்கொ‌‌ண்டா‌ர்.

விவாதத்தின் போது காங்கிரஸ் சார்பில் பேசிய பீட்டர் அல்போன்சுக்கும், இந்திய கம்யூனிஸ்‌க‌ட்‌சி சார்பில் பேசிய சிவபுண்ணியத்துக்கும் இடையே சில வாக்குவாதம் ஏற்பட்டதாக சு‌ட்டி‌க்கா‌ட்டிய கருணா‌நி‌தி, முடிவில் அனைவரும் இலங்கையில் போர் நிறுத்தம் என்பதை ஒத்துக் கொண்டிரு‌‌ப்பதாகவு‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இதையடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அப்போது உறுப்பினர்கள் அனைவரும் மேஜையை தட்டி இதனை வரவே‌ற்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்