சமீபத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட இஃப்தார் நோன்பு குறித்து இஸ்லாமிய அமைப்பு பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளது.
ரம்ஜான் பண்டிகைக்கு முன்னதான நோன்பில் இஸ்லாமியர்கள் இருந்து வரும் நிலையில், சமீபத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இஃப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் என்ற இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
அதில் “விஜய் நடத்திய இப்தார் நிகழ்ச்சி கண்ணியமான இப்தார் நிகழ்ச்சிக்கு விரோதமாக நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் இப்தார் நிகழ்ச்சிக்கு தொடர்பில்லாத குடிக்காரர்களும், ரவுடிகளும் கலந்து கொண்டனர். உண்மையாக நோன்பு கடைபிடித்த இஸ்லாமியர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் பவுன்சர்கள் மூலமாக அடித்து உதைத்து வெளியேற்றப்பட்டனர்” என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
மேலும் நோன்பு திறக்கும் நேரத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவே விஜய் வந்தது தவறு என்றும், அவர் நடத்திய இப்தார் நிகழ்ச்சி விதிமுறைகளுக்கு மாறாக இருந்ததால் அவர் மீது உரிய சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K