‌சி‌றில‌ங்க அரசு போ‌ரை ‌நிறு‌‌த்த வே‌ண்டு‌ம் : ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் ‌தீ‌ர்மான‌ம்!

புதன், 12 நவம்பர் 2008 (12:33 IST)
சி‌றில‌ங்க அரசு போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டு உடனடியாக படைகளைப் பழைய நிலைக்கு விலக்கிக் கொள்ள வேண்டும் எ‌ன்று த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தமிழக ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் முத‌ல்வ‌ர் கருணாநிதி இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வருவதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தார்.

அப்போது அவர் கூறுகை‌யி‌ல், "இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் நீங்க வேண்டுமானால் அங்கு உடனடியாகப் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். இது உலகத் தமிழர்களின் ஏகோபித்த விருப்பமாகும். போர் நிறுத்தம் என்பது இரு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்று என தமிழக முத‌ல்வ‌ர் வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கு நாங்கள் தயார் என்று மற்றொரு தரப்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், இலங்கை அரசும் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டு உடனடியாக படைகளைப் பழைய நிலைக்கு விலக்கிக் கொள்ள வேண்டும்.

அத்துடன் தமிழர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை வலியுறுத்துகிறது.

இந்தியப் பேரரசு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இலங்கை அரசை போர் நிறுத்தத்திற்கு இணங்க வைத்து தமிழர் பகுதிகளில் நிலையான அமைதியும், சக வாழ்வும் ஏற்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று தமிழ்நாடு சட்டப்பேரவை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது'' எ‌ன்று கூறினார்.

இந்த தீர்மானத்தை அனைத்து கட்சி உறுப்பினர்களும் மேஜையை தட்டி வரவேற்றனர். இதையடுத்து இந்த தீர்மானம் குறித்து அனைத்து கட்சி தலைவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்