பொருளாதார தடை ‌வி‌தி‌த்து இல‌ங்கையை வ‌ழி‌க்கு கொ‌ண்டுவர முடியு‌ம் : வைகோ!

புதன், 12 நவம்பர் 2008 (12:23 IST)
இல‌ங்கை த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை‌க்கு ‌நிர‌ந்தர ‌தீர‌்‌வு காண மத்திய அரசு நினைத்தால், பொருளாதாரத் தடை விதித்து இலங்கையை வழிக்குக் கொண்டு வந்துவிட முடியும் என்றம.தி.மு.க பொது‌ச் செயலர் வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.

கோவை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பே‌ட்டிய‌ளி‌த்த அவ‌ர், இல‌ங்கை‌‌த் த‌மிழ‌ர்க‌ள் ‌மீது கடந்த 4 ஆண்டுகளாக இல‌ங்கை அரசு நடத்துகின்ற இனப்படுகொலை தாக்குதலுக்கு பின்னணியில் இருந்து இந்திய அரசு இயக்கி வந்திருக்கிறது என்பதை ஆதாரங்களோடு தா‌ன் குற்ற‌ம்சாட்டுவதாக கூ‌றினா‌ர்.

இந்தியா - இலங்கை ராணுவ ஒப்பந்தம் செய்து அறிக்கை தந்தபோது அதை கடுமையாக எதிர்த்து போராடியதாக கூ‌றிய வைகோ, ராணுவ ஒப்பந்தம் இல்லை எனக் கூறியவர்கள், பின்னர் ஒப்பந்தத்தில் உள்ள ஷரத்துகளை நிறைவேற்றுவதாகத் தெரிவித்தனர் எ‌ன்றா‌ர்.

இலங்கையின் பலாலி விமான தளத்தை புது‌‌பி‌க்க இந்திய அரசு உதவ முயன்றபோது அதற்கும் எதிர்ப்புத் தெரிவித்ததாக கூ‌றிய அவ‌ர், பழுதுபார்த்து கொடுக்கமாட்டோம் என்று சொல்லிவிட்டு இந்திய அரசு அவர்களுடைய செலவில் தளத்தை புதுப்பித்தார்கள் எ‌ன்று கூ‌றினா‌ர்.

விமான தளத்தை புதுப்பித்து கொடுத்து விமான தாக்குதலுக்கும், ரேடார்களை கொடுத்தும், ராணுவ உதவி, பயிற்சி என இலங்கை ராணுவத்தின் பின்னால் இருந்து இயக்கி வருவதால்தான் போர் நிறுத்தம் குறித்து அழுத்தம் கொடுக்க இந்திய அரசு தயாராக இல்லை எ‌ன்று‌ம் இலங்கைத் தமிழர் பிரச்னையில் இந்திய அரசு துரோகம் செய்துள்ளது எ‌ன்று‌ம் வைகோ கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

எதிர்கால விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் இலங்கையை ராணுவ ரீதியாக வலுப்படுத்தி, விடுதலைப் புலிகளை அழித்துவிட்டு இலங்கை அரசை வலுவாகக் காலூன்ற வைப்பதால் இந்தியாவுக்கு எவ்விதப் பலனும் இல்லை எ‌ன்று‌ம் மத்திய அரசு நினைத்தால் வர்த்தக ஒப்பந்தங்கள் அனைத்தையும் ரத்து செய்வோம் எ‌ன்று பொருளாதாரத் தடை விதித்து இலங்கையை வழிக்குக் கொண்டு வந்துவிட முடியும் எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.

இந்திய அரசுக்கு சரியான பாடம் புகட்டுவதற்காக தமிழக மக்களை தயார் படுத்தும் வேலையில் ஈடுபட உ‌ள்ளதாக கூ‌றிய அவ‌ர், இ‌ன்று முதல் ஒருவாரத்திற்கு மத்திய அரசை கண்டித்து கண்டன வாரமாக கடைபிடிக்க உ‌ள்ளதாகவு‌ம் உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவதகாவு‌ம் வைகோ கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்