இலங்கை தமிழர் பிரச்சனை : சட்ட‌ப்பேரவை‌யி‌ல் அமளி!

செவ்வாய், 11 நவம்பர் 2008 (18:03 IST)
இல‌ங்கை த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை காரணமாக இ‌ன்று த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் கடு‌ம் அம‌ளி ஏ‌ற்ப‌ட்டது.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் அ.இ.அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., இந்திய கம்யூனிஸ்டு உறு‌ப்‌பின‌ர்க‌ள் ஒட்டு மொத்தமாக எழுந்து நின்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்சினைக்காக கோஷம் எழுப்பின‌ர்.

ஜெயலலிதாவின் பாதுகாப்பு குறித்து அ.தி.மு.க. வினரு‌ம், இலங்கையில் போர் நிறுத்தம்செய்ய வலியுறுத்தி பா.ம.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரு‌ம் பேச அனுமதிக்குமாறு கோஷமிட்டனர். இதனால் சபையில் கூச்சல்-குழப்பம் நிலவியது.

இதையடுதது அனைவரு‌ம் எழுந்து நின்று கோஷமிட்டால் எ‌ப்படி எ‌ன்று‌ம் இ‌ன்று எந்த பிரச்சினையை பற்றி பேசுவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது எ‌ன்று‌ம் அவை‌த்தலைவ‌ர் ஆவுடைய‌‌ப்ப‌ன் கூ‌றினா‌ர்.

சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமாக உரத் தட்டுப்பாடு பிரச்சினை, பேரு‌ந்து கட்டண பிரச்சனை, வால்பாறையில் ஆசிரியர் பற்றாக்குறை உள்பட 5 பிரச்சனைகள் எடுக்கப்பட்டுள்ளது எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

இதை‌த்தொட‌ர்‌ந்து முத‌‌ல்வ‌ர் கருணா‌நி‌தி தலை‌யி‌ட்டு தனித்தனியாக, பிரச்சினை குறித்து பேசினால் அதற்கு பதில் சொல்ல எங்களுக்கு சுலபமாக இருக்கும். அப்படி அந்த முறையை பின்பற்ற வேண்டும் என்று கூ‌றினா‌ர்.

இதையடு‌த்தஉறு‌ப்‌பின‌ர்க‌ளஒ‌‌வ்வொருவரு‌மத‌னி‌த்த‌னியாக ‌பிர‌ச்சனகு‌றி‌த்தபே‌‌சின‌ர். இலங்கை பிரச்சினையை விவாதத்திற்கு எப்போது எடுப்பீர்கள் எ‌ன்று ஜி.கே.மணி கே‌ட்டா‌ர்.

ஞானசேகரன் (காங்): இலங்கையில் போர் நிறுத்தம் குறித்து எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. இந்த பிரச்சினை பற்றி பேசத்தான் வாய்ப்பு கேட்கிறோம்.

சிவபுண்ணியம் (இந்திய கம்யூ.): இலங்கையில் இரு தரப்பினரும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று முத‌ல்வ‌ர் ஏற்கனவே கூறி இருந்தார். எங்கள் கட்சி தலைவர் தா.பாண்டியனும், அறிக்கை வெளியிட்டார். தற்போது விடுதலை‌ப்புலிகள் போர் நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டனர். ஆனால் இலங்கை மறுத்துவி‌ட்டு அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவிக்கிறது.

ஞானசேகரன்: இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் அப்பாவி தமிழ் மக்கள் காப்பாற்றப் பட வேண்டும் என்பது தான் எங்கள் நிலைபாடு.

சிவபுண்ணியம்: மத்திய அரசு துரித கவனம் செலுத்தினால் போர்நிறுத்தம் ஏற்படும். ஆனால் மத்திய அரசு பாராமுகமாக உள்ளது.

இ‌வ்வாறு உறு‌ப்‌பின‌ர்க‌ள் பே‌சின‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்