காற்றழுத்த தாழ்வு நிலை: 2 நா‌ட்க‌ள் மழை பெ‌ய்ய வா‌ய்‌ப்பு!

செவ்வாய், 11 நவம்பர் 2008 (17:22 IST)
வங்க கடலில் தென்கிழக்கு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதா‌ல் த‌மிழக‌த்‌தி‌ல் அடு‌த்த 2 நா‌ட்க‌ள் பரவலாக ந‌ல்ல மழை பெ‌ய்ய வா‌ய்‌ப்பு உ‌ள்ளதாக செ‌ன்னை வா‌னிலை ஆ‌‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

வங்க கடலில் தென்கிழக்கு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த கா‌ற்றழு‌த்த தாழ்வுநிலை தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் த‌மிழக‌த்‌தி‌ல் அடு‌த்த 48 ம‌ணி நேர‌த்து‌க்கு நல்ல மழை பெய்ய வாய்ப்பு உ‌ள்ளதாக தெ‌ரி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்