செ‌‌ல்வ‌ப்பெரு‌ந்தகை எ‌ம்.எ‌ல்.ஏ.பத‌வி ‌வில‌கினா‌ர்!

செவ்வாய், 11 நவம்பர் 2008 (16:23 IST)
இல‌ங்கை‌யி‌ல் போரை ‌நிறு‌த்த வ‌லியுறு‌த்‌தி ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி ச‌ட்ட‌ப்பேரவை உறு‌ப்‌பின‌ர் செ‌ல்வ‌ப்பெரு‌ந்தகை தனது எ‌ம்.எ‌ல்.ஏ. பத‌வி‌யி‌ல் இரு‌ந்து ‌வில‌கினா‌ர்.

அவ‌ர் தனது பத‌வி ‌விலக‌‌ல் கடித‌த்தை, அவை‌த்தலைவ‌ர் ஆவுடைய‌ப்ப‌னிட‌ம் இ‌ன்று வழ‌ங்‌கினா‌ர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சா‌ர்‌பி‌ல் கடலூ‌ர் மாவ‌ட்ட‌ம் ம‌ங்களூ‌ர் தொகு‌தி‌‌‌யி‌ல் இரு‌ந்து சட்ட‌ப்பேரவை உறு‌ப்‌பின‌ராக தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டவ‌ர் செல்வப்பெருந்தகை. இவ‌ர் இல‌ங்கை‌யி‌ல் போரை ‌நிறு‌த்த வ‌லியுறு‌த்‌தி தனது பத‌வி‌யி‌ல் இரு‌ந்த ‌விலகுவதாக ‌சில ‌தின‌ங்களு‌க்கு மு‌ன் அ‌றி‌வி‌த்‌திரு‌ந்தா‌ர்.

அத‌ன்படி இ‌ன்று அவை‌த்தலைவ‌ர் ஆவுடைய‌ப்ப‌னிட‌ம் தனது பத‌வி ‌‌விலக‌ல் கடித‌த்தை அவ‌ர் அ‌ளி‌த்தா‌ர். இதனை உறுதிப்படுத்திய அவை‌த்தலைவ‌ர் ஆவுடைய‌ப்ப‌ன் செல்வப்பெருந்தகை தன்னிடம் ச‌ட்ட‌ப்பேரவை உறு‌ப்‌பின‌ர் பத‌வி‌யி‌ல் இரு‌ந்து ‌விலகு‌ம் கடி‌த‌த்தை அளித்திருப்பதாகவும் அது தன்னுடைய ஆய்வில் இருப்பதாகவும் கூறினார்.

எ‌னினு‌ம், கட்சி‌த் தலைவர் தொ‌ல். திருமாவளவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே அவ‌ர் தனது பத‌வி‌‌யி‌ல் இரு‌ந்து ‌விலகுவதாக வெ‌ளியான தகவ‌ல்களை அவ‌ர் ஏ‌ற்கனவே மறு‌த்‌திரு‌ந்தா‌ர் எ‌ன்பது ‌கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்