த‌‌மிழக‌ ‌மீனவ‌ர்களை ‌நி‌ர்வாண‌ப்படு‌த்‌‌தி ‌சி‌றில‌ங்க கட‌‌ற்படை‌யின‌ர் ‌‌மீ‌ண்டு‌ம் தா‌க்குத‌ல்!

செவ்வாய், 11 நவம்பர் 2008 (15:07 IST)
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை ‌நி‌ர்வாண‌ப்படு‌த்‌தி ‌சி‌றில‌ங்க கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 8 பேர் காயமடைந்ததோடு ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.

ராமே‌ஸ்வரத்தை‌ச் சே‌ர்‌ந்த 500‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட மீனவர்கள் நேற்று காலை ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மாலை 5 மணி அளவில் கச்சத்தீவு பகுதியில் சில மீனவர்கள் 10 விசைப்படகுகளில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது அங்குவந்த ‌சி‌றில‌ங்க கடற்படையினர் படகுகளை சுற்றிவளைத்து த‌மிழக ‌மீனவ‌ர்க‌ளி‌ன் படகுகளில் ஏறினர். மீனவர்களை இரு‌‌ம்பு தடி மற்றும் துப்பாக்கி முனைகளால் தாக்கி அவர்களை நிர்வாணப்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பின்னர் படகில் இருந்த பொரு‌ட்களை கடலுக்குள் தூக்கி வீசியதுடன், ‌மீ‌ன்‌பிடி வலைகளையும் அறுத்து சேதப்படுத்‌தியு‌ள்ளனர். இதில் 8 மீனவர்கள் காயமடைந்தனர். சுமார் 5 லட்சம் மதிப்பிலான வலைகள் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன.

‌‌சி‌றில‌ங்க கட‌‌ற்படை‌யின‌ரிட‌ம் இரு‌ந்து தப்பி‌த்து இன்று காலை கரை திரும்பிய மீனவர்கள் கொடுத்த புகாரின் அடி‌ப்படை‌யி‌ல் காவ‌ல் துறை‌யின‌ர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஒரு வார காலத்தில் தமிழக மீனவர்கள் ‌சி‌றில‌ங்க கட‌‌ற்படை‌யின‌ர் தாக்குத‌ல் நட‌த்துவது இது மூன்றாவது முறையாகும். த‌மிழக, இ‌ந்‌திய அரசு எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ம் ‌சி‌றில‌ங்க கடற்படையினர் தொட‌ர்‌ந்து தா‌க்குத‌லி‌ல் ஈடுபட்டு வருவது மீனவர்க‌ள் ம‌த்‌தி‌யில பெரு‌ம் பத‌ற்ற‌‌த்தை ஏ‌ற்ப‌டு‌த்‌தியு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்