நளினி விடுதலைக் கோரிய வழக்கில் நீதிபதி நாகமுத்து அளித்த தீர்ப்பை எதிர்த்து, மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்ய அனுமதி கேட்டு ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 17 ஆண்டுகளாக வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி தன்னை முன் கூட்டியே விடுதலை செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகமுத்து கடந்த மாதம் அளித்த தீர்ப்பில், "நளினி விடுதலை விவகாரத்தில் ஆயுள் கைதிகளுக்கான ஆலோசனை மையம் முறையாக அமைக்கப்பட்டு அவரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.