இலங்கை‌ போர் நிறுத்தம் பற்றி சட்ட‌ப்பேரவை‌யி‌ல் தீர்மானம் : பா.ம.க.!

திங்கள், 10 நவம்பர் 2008 (17:46 IST)
இலங்கையில் போர் நிறுத்தம் செய்வது குறித்து த‌மிழச‌ட்ட‌ப்பேரவை‌யி‌லதனி நபர் தீர்மானம் கொண்டு வர பா.ம.க. ச‌ட்ட‌ப்பேரவஉறு‌ப்‌பின‌ர்க‌ளகூ‌ட்ட‌த்‌தி‌லமுடிவசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

பா.ம.க. ச‌ட்ட‌ப்பேரவை உறு‌ப்‌பின‌ர்க‌ள் கூட்டம் அத‌ன் தலைவ‌ர் ஜி.கே.மணி தலைமையில் இ‌ன்று ச‌ெ‌ன்னை‌யி‌ல் நடந்தது.

பி‌ன்ன‌ர் இ‌ந்த‌க் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து ஜி.கே.மணி தெ‌ரி‌வி‌க்கை‌யி‌ல், நடைபெறும் சட்ட‌ப்பேரவை கூட்டத்தில் மின்வெட்டு, விலைவாசி உயர்வு, மதுவிலக்கு, சமச்சீர் கல்வி, இலங்கை பிரச்சனை ப‌ற்‌‌றி ‌பிர‌ச்சனைகளை எழு‌ப்ப உ‌ள்ளதாக கூ‌றினா‌ர்.

மேலு‌ம், இலங்கையில் போர் நிறுத்தம் செய்வது குறித்து தனி நபர் தீர்மானம் கொண்டு வர உ‌ள்ளதாகவு‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்