வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை : சென்னையில் மழை!
திங்கள், 10 நவம்பர் 2008 (14:43 IST)
தென் மேற்கு வங்க கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாவதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று பிற்பகலில் மிதமான மழை பெய்தது.
வடகிழக்கு பருவ மழையையொட்டி கடந்த மாதம் தமிழகம் முழுவதும் பரவலாக நல்லை மழை பெய்தது. அதன் பிறகு சிலநாட்கள் மழை பெய்யாமல் இருந்தது.
இந்த நிலையில் தென் மேற்கு வங்க கடலில் ஒரு புதிய காற்றழுத்த நிலை உருவாவதை தொடர்ந்து தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.