‌விடுதலை ‌சிறு‌த்தை எ‌ம்.எ‌ல்.ஏ. நாளை பத‌வி ‌விலக‌ல்!

திங்கள், 10 நவம்பர் 2008 (11:57 IST)
விடுதலை ‌சிறு‌த்தை‌க‌ள் க‌ட்‌சியை‌ச் சே‌ர்‌ந்த ம‌ங்களூ‌ர் தொகு‌தி ச‌ட்ட‌ப்பேரவை உறு‌ப்‌பின‌ர் செ‌ல்வ‌ப்பெரு‌ந்தகை தனது உறு‌ப்‌பின‌ர் பத‌வி‌‌யி‌ல் இரு‌ந்து நாளை ‌விலக உ‌ள்ளதாக அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

கடலூ‌ர் மாவ‌ட்ட‌ம் ம‌ங்களூ‌ர் ச‌ட்ட‌ப்பேரவை தொகு‌தி‌யி‌ல் இரு‌ந்து உறு‌ப்‌பினராக தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டவ‌ர் செ‌ல்வ‌ப்பெரு‌ந்தகை. இவ‌ர் தனது உறு‌ப்‌பின‌ர் பத‌‌வி‌யி‌ல் இரு‌ந்து ‌விலக உ‌ள்ளதாக கட‌ந்த ‌சில ‌தின‌ங்களு‌க்கு மு‌ன்ன‌ர் அ‌றி‌வி‌த்‌‌திரு‌ந்தா‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல், இ‌ன்று ச‌ட்ட‌ப்பேரவை‌க் கூ‌ட்ட‌த்து‌க்கு வ‌ந்த அவ‌ர் பத‌வி ‌விலக‌ல் கடித‌த்தை அவை‌த்தலைவ‌ர் ஆவுடைய‌ப்ப‌னிட‌ம் வழ‌ங்குவா‌ர் எ‌ன்று எ‌தி‌ர்‌பா‌ர்‌க்க‌ப்‌ப‌ட்டது.எ‌னினு‌ம், அவ‌ர் பத‌வி ‌விலக‌ல் கடி‌த்தை அ‌ளி‌க்க‌வி‌ல்லை.

கூ‌ட்ட‌ம் முடி‌ந்தது‌ம் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், இன்றைய கூட்டத்தில் மறைந்த உறு‌ப்‌‌பின‌ர் வீர. இளவரசனின் இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டதா‌ல் தனது ச‌ட்ட‌ப்பேரவை உறு‌ப்‌பின‌ர் பதவி‌யி‌ல் இரு‌ந்து இ‌ன்று ‌விலகவி‌ல்லை எ‌ன்று கூ‌றினா‌ர்.

இதையடு‌‌த்து அவ‌ர் நாளை தனது பதவி‌யி‌ல் இரு‌ந்து ‌விலக உ‌ள்ளதாகவு‌ம் இதற்கான காரணத்தை சட்ட ப்பேரவை‌யி‌ல் அறிவித்து விட்டு அவை‌த்தலைவ‌ர் ஆவுடைய‌ப்ப‌னி‌ட‌ம் தனது பத‌‌வி ‌விலக‌ல் கடித‌த்தை அ‌ளி‌க்க உ‌ள்ளதாகவு‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

விடுதலை சிறுத்தைகள் சார்பில் செல்வப்பெருந்தகை, ரவிக்குமார் ஆகியோர் ச‌ட்ட‌ப்பேரவை உறு‌ப்‌பின‌ர்களாக உள்ளனர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்