விபத்தின்றி வாகனம் ஓட்டினால் விருது

ஈரோடு: சத்தியமங்கலத்தில் விபத்தின்றி வாகனம் ஓட்டும் ஓ‌ட்டுனருக்கு விருது வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக சத்தியமங்கலம் காவ‌ல்துறை டி.எஸ்.பி. சுந்தரராஜன் கூறினார்.

சத்தியமங்கலம் காவல்துறை சார்பாக சாலை விழிப்புணர்வு கருத்தரங்கம் நகராட்சி சமுதாய கூடத்தில் நடந்தது.

சத்தியமங்கலம் உட்கோட்ட காவ‌ல்துறை டி.எஸ்.பி. சுந்தரராஜன் கருத்தரங்கிற்கு தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியது, ஓ‌ட்டுநர்கள் வாகனங்களை இயக்கும்போது ூக்கம் வந்தால் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு ூங்கி எழுந்து அதற்கு பிறகு வாகனத்தை இயக்க வேண்டும். அதிக வேகமாக செல்லக்கூடாது. மேலும் வாகனங்கள் ஓட்டும்போது செல்ஃபோன் பேசிவிட்டு செல்வது குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுவது கடுமையான குற்றம்.

சத்தியமங்கலம் பகுதியில் உள்ள டிரைவர்கள் அடுத்த நான்கு மாதத்தில் விபத்தில்லாமல் வாகனங்களை ஓட்டினால் அவர்களை பாராட்டி விருது வழங்கும் திட்டம் கொண்டுவர முடிவு செய்துள்ளேன் எ‌ன்று கூ‌றினா‌ர்.

கருத்தரங்கில் கார், ஆட்டோ, டெம்போ மற்றும் லாரி ஓ‌ட்டுந‌ர்க‌ள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அவர்கள் கூறும்போது சத்தி பேரு‌ந்து ‌‌நிலைய‌த்‌தி‌ல் இருந்து கோவை பேரு‌ந்துக‌ள் வெளிவரும் இடத்தில் நோ பார்க்கிங் போர்டு இருந்தும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது போ‌ன்ற ப‌‌ல்வேறு கரு‌த்து‌க்களை வ‌லியுறு‌த்‌தின‌ர். இத‌ற்கு உடனடியாக நடவடி‌க்ைக எடு‌ப்பதாக காவ‌ல்துறை டி.எஸ்.பி. சுந்தரராஜன் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்