சட்டப்பேரவை துணை தலைவர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அ.இ.அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்களின் உறுப்பினர்களின் கூட்டம் இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
இந்தக்கூட்டத்தில் எஸ்.வி.சேர் தவிர மற்ற அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். சட்டப்பேரைவயில் அ.இ.அ.தி.மு.க.வின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி இந்தக்கூட்டத்தில் உறுப்பினர்களிடம் எடுத்து கூறப்பட்டதாகத் தெரிகிறது.
பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள சென்றபோது காலில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக சிகிச்சை பெற்று வருவதால் ஜெயலலிதா இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.