பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ. தங்கபாலு நேற்று சென்னையில் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தங்கபாலு, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பாமக ஒரு முக்கியக் கட்சி என்றும், ரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் -பா.ம.க. கூட்டணி தொடரும் என்றும் கூறினார்.
எனவே அக்கட்சித் தலைவர்களுடன் நேரடியாகவும், தொலைபேசி வழியாகவும், தொடர்ந்து பேசி வருகிறோம். அந்த வகையில் இந்த சந்திப்பும் வழக்கமான, நட்பு ரீதியிலான சந்திப்பு மட்டுமே என்றார்.
இலங்கைப் பிரச்னையைப் பொருத்தவரையில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு ஆதரவாகவே தொடர்ந்து காங்கிரஸ் கட்சி செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வரும் 13ஆம் தேதி புதுடெல்லி வருகை தரும் இலங்கை அதிபர் ராஜபக்சே-விடம், சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்ட முடிவுகளையும், இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற 6 கோடி தமிழர்களின் உணர்வுகளையும் தெரிவிக்க வேண்டும் என பிரதமரிடம் தாம் வலியுறுத்தியுள்ளதாகவும் கே.வீ. தங்கபாலு கூறினார்.
பிரதமரும் அவ்வாறே ராஜபக்சே-விடம் கேட்டுக்கொள்வதாக உறுதியளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.