இலங்கைத் தமிழர் பிரச்னை: சின்னத்திரை கலைஞர்கள் நாளை உ‌ண்ணா‌விரத‌ம்!

சனி, 8 நவம்பர் 2008 (10:20 IST)
இலங்கையிலதமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவர் விடுதலை, பொதுச் செயலர் எஸ்.என்.வசந்த் ஆகியோர் வெளியிட்ட அ‌றி‌க்கை‌யி‌ல், "இலங்கையிலதமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து சின்னத்திரை கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் பங்கேற்கும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம், சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை அருகே ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெறும்.

அனைத்து தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர், நடிகைகள், எழுத்தாளர்கள், சின்னத்திரையில் பணிபுரியும் அனைத்து கலைஞர்களும் கலந்து கொள்ள வேண்டும்.

இத்துடன் சின்னத்திரையில் பணிபுரியும் கலைஞர்கள் அனைவரும் தங்களது ஒரு நாள் ஊதியத்தை முதல்வர் அறிவித்துள்ள 'இலங்கைத் தமிழர் நிவாரண நிதி' பெயரில் காசோலையாக வழங்க வேண்டும்.

சின்னத்திரை நடிகர் சங்கம், எழுத்தாளர் சங்கம், இயக்குநர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள அனைவரும் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும்.

உண்ணாவிரதப் போராட்டத்தை பாரதிய ஜனதா கட்சியின் பொது‌ச் செயலர் எஸ்.திருநாவுக்கரசர் எம்.பி. தொடங்கிவைக்கிறார்" என்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்