அமை‌தி கா‌க்கவு‌ம்: தொண்டர்களு‌க்கு கிருஷ்ணசாமி வேண்டுகோள்!

வியாழன், 6 நவம்பர் 2008 (14:49 IST)
கைது செய்யப்பட்ட புதிய தமிழகம் கட்சியினர் அனைவரையும் விடுதலை செய்யவும், அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறவும் முதலமை‌ச்ச‌ரிட‌ம் வலியுறுத்தி உள்ளேன் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ள அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் தலைவ‌ர் ‌கிரு‌ஷ்ணசா‌மி, எனவே கட்சி‌த் தொண்டர்கள் அமைதி காக்குமாறு அ‌ன்புட‌ன் கேட்டுக் கொ‌ள்‌கிறே‌ன் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள உத்தப்புரம் கிராமத்தில் கடந்த 6 மாத காலமாக மோதிக் கொள்ளும் இரு சமூகங்களிடையே சுமூகத் தீர்வு காணும் நோக்கத்தோடு இரு சமூகங்களின் அழைப்பின் பேரில் கடந்த 2ஆ‌ம் தேதி உத்தப்புரம் சென்றேன்.

அக் கிராம மக்களின் குறைகளை கேட்டறிந்து சமூகத் தீர்வு ஏற்படுவதற்குண்டான நல்ல அடித்தளத்தை அமைத்து விட்டு நான் மதுரை திரும்பும் வழியில் எனது கார் மற்றும் தொண்டர்களின், வாகனங்கள் எழுமலை கிராமத்தில் அடித்து நொறுக்கப்பட்டன. பிரச்சனைக்கு நமது முயற்சி மூலமாக சுமூகத் தீர்வு வந்து விடக்கூடாது என்று கருதிய சில சுயநலசக்திகளும் எழுமலையில் கொலை வெறித் தாக்குதல் தொடுத்து கலவரத்திற்கு வித்திட்டனர். எனினும் நானும் தொண்டர்களும் பொறுமை காத்து அன்று எவ்வித மோதலுக்கும் வழிவகுக்காமல் திரும்பினோம்.

எழுமலையில் நடந்த சம்பவத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மிக்க வேதனைக்கும் வருத்தத்திற்கும் ஆளானதின் விளைவாக ஆங்காங்கே தமிழக மெங்கும் ஜனநாயக ரீதியாக சில மறியல்கள் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெற்றிருக்கலாம். அப்போது அநியாயமாக 22 வயது இளைஞன் சுரேஷ் துப்பாக்கி சூட்டிற்கு பலியாகி உள்ளான். இது மேலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் கொந்தளிப்பு உருவாகுவ தற்கு காரணமாகி விட்டது. இது பற்றி நான் முதலமைச்சரை சந்தித்து துப்பாக்கி சூடுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளேன்.

கடந்த 2ஆ‌ம் தேதி முதல் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக கைது செய்யப்பட்ட புதிய தமிழகம் கட்சியினர் அனைவரையும் விடுதலை செய்யவும், அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறவும் வலியுறுத்தி உள்ளேன்.

நமது கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும், எனவே புதிய தமிழகம் கட்சி தொண்டர்கள் அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தொண்டர் சுரேஷ் மரணத்திற்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் ஒருவார காலத்திற்கு புதிய தமிழகம் கட்சி கொடியினை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு கேட்டுக் கொள்கிறேன் எ‌ன்று ‌கிரு‌ஷ்ணசா‌மி கூ‌றியு‌ள்ளா‌ர்.