தஞ்சை- திருவாரூர் இடையே சிறப்பு ரயில்!
வியாழன், 6 நவம்பர் 2008 (12:27 IST)
பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக நவம்பர் 7ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை தஞ்சாவூர், திருவாரூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த சிறப்பு ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இயக்கப்படுகிறது. தஞ்சாவூரில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் 11.30 மணியளவில் திருவாரூரை சென்றடையும்.
இதேபோல் மறுமார்க்கமாக திருவாரூரில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் இரவு 8.20 மணிக்கு தஞ்சாவூரைச் சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில்கள் மாரியம்மன் கோவில், குடிகாடு, சலியமங்கலம், அம்மாபேட்டை, கோயில்வேணி, நீடாமங்கலம், கொரடச்சேரி, திருமதிகுன்னம், குளிகரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.