டிச.31 வரை அஞ்சலக தங்கக் காசுக்கு 5 விழுக்காடு தள்ளுபடி!
வியாழன், 6 நவம்பர் 2008 (10:41 IST)
தமிழகத்தில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் விற்பனை செய்யப்படும் தங்க காசுகளை டிச.31ஆம் தேதி வரை 5 விழுக்காடு தள்ளுபடி சலுகையுடன் பொதுமக்கள் வாங்கிக்கொள்ளலாம் என்று அஞ்சல்துறை அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தங்க காசுகள் விற்பனை அக். 15ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழக அஞ்சல் அலுவலகங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இங்கு அரை கிராம், ஒரு கிராம், 5 கிராம் மற்றும் 8 கிராம் எடையுள்ள தங்க காசுகள் விற்கப்படுகின்றன. இந்த தங்ககாசுகளை வரும் டிச.31ம் தேதி வரை 5 விழுக்காடு தள்ளுபடி சலுகையுடன் பொதுமக்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.