நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, திருச்சிக்கு சிறப்பு ரயில்!
வியாழன், 6 நவம்பர் 2008 (09:23 IST)
குளிர்காலத்தை முன்னிட்டும், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் தெற்கு ரயில்வே, சென்னையில் இருந்து நாகர்கோவில், தூத்துக்குடி, திருச்சிக்கு சிறப்பு ரயில்களை இயக்குகிறது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குளிர்கால, பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு வருகிற 8, 10, 15, 17, 22, 14, 19, டிசம்பர் 1, 6, 8, 13, 15, 20, 22, 27, 29ஆம் தேதியும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் எழும்பூரில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.15 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
மறுமார்க்கம், நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு வருகிற 9, 11, 16, 18, 23, 25, 30, டிசம்பர் 2, 7, 9, 14, 16, 21, 23, 28, 30ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் (0610) நாகர்கோவிலில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.
மேலும், சென்னை எழும்பூரில் நெல்லைக்கு வருகிற 13, 20, 27, டிசம்பர் 4, 11, 18, 25ஆம் தேதிகளில் இரவு 8.25 மணிக்கும் (0603), நெல்லையில் இருந்து எழும்பூருக்கு 14, 21, 28, டிசம்பர் 5, 12, 19, 26 ஆகிய நாட்களிலும் சிறப்பு ரயில் (0604) இயக்கப்படுகிறது.
நாகர்கோவிலில் இருந்து எழும்பூருக்கு 10, 17, 24, டிசம்பர் 1, 8, 15, 22, 29 தேதி இரவு 7.40 மணிக்கும் (0638), எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு 11, 18, 25, டிசம்பர் 2, 9, 16, 23, 30ஆம் தேதியும் சிறப்பு ரயிலும் (0637), சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு 10, 17, 24, டிசம்பர் 1, 8, 15, 22, 29ஆம் தேதி இரவு 11.45 மணிக்கும் (0685), மறுமார்க்கம், தூத்துக்குடியில் இருந்து எழும்பூருக்கு 11, 18, 25ஆம் தேதி இரவு 8.45 மணிக்கும் (0686) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, மீளவிட்டான், தூத்துக்குடி மேலூர் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். தூத்துக்குடியில் இருந்து சென்னை வரும் சிறப்பு ரயில் மாம்பலத்தில் கூடுதலாக நின்று செல்லும்.
அதே போல், திருச்சியில் இருந்து சென்னைக்கு 9, 16, 23, 30, டிசம்பர் 7, 14, 21, 28ஆம் தேதி இரவு 8.30 மணிக்கும் (0634), சென்னையில் இருந்து திருச்சிக்கு 12, 19, 26, டிசம்பர் 3, 10, 17, 24, 31ஆம் தேதியும் இரவு 11.45 மணிக்கும் சிறப்பு ரயில் (0633) இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (6ஆம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.