முதல்வருடன் டாக்டர் கிருஷ்ணசாமி சந்திப்பு!

வியாழன், 6 நவம்பர் 2008 (03:40 IST)
தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று முதல் அமைச்சர் கருணாநிதியை புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோரியுள்ளார்.

சென்னையில் நேற்று முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி, இதற்கான கோரிக்கை மனுவை அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, சமீபத்தில் பசும்பொன்னில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கார் தாக்குதல், தனது கார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகியவை குறித்து முதல்வரிடம் எடுத்துக் கூறியதாகத் தெரிவித்தார்.

அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு முதல்வரை தாம் கேட்டுக் கொண்டதாகவும் கிருஷ்ணசாமி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்