அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் பராக் ஒபாமாவிற்கு முதல் அமைச்சர் கருணாநிதி தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
ஒபாமாவிற்கு முதலமைச்சர் அனுப்பியிருக்கும் வாழ்த்துச் செய்தியில், ஒபாமாவின் தலைமையின் கீழ், இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையேயான நல்லுறவில் புதிய அத்தியாயம் ஏற்படும் என்று நம்புவதாகக் கூறியுள்ளார்.
மாற்றத்தை வேண்டி அமெரிக்க மக்கள் ஒபாமாவைத் தேர்ந்தெடுத்திருப்பதாகவும், வெற்றிக்கு தமது வாழ்த்துக்கள் என்றும் கருணாநிதி அந்த செய்தியில் கூறியுள்ளார்.