கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பு!

வியாழன், 6 நவம்பர் 2008 (00:27 IST)
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் கூறியதைத் தொடர்ந்து, காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் அது வெறும் புரளி என தெரிய வந்தது.

சென்னை மாநகர காவல்துறை கட்டுப்பாடு அறைக்கு நள்ளிரவில் பேசிய ஒருவர், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், எந்த நேரத்திலும் அவை வெடிக்கலாம் என்று கூறி விட்டு போனை துண்டித்து விட்டார்.

இதைத்தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர், மோப்ப நாய்களுடன் சென்ற காவல்துறையினர் பேருந்து நிலையத்தில் துருவித்துருவி சோதனை போட்டனர். எந்த வெடிப்பொருளும் சிக்கவில்லை. எனவே இது வெறும் புரளி என்று தெரிய வந்தது.

டெலிபோனில் தவறான தகவலை கொடுத்தது யார்? என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்