தீ‌ப்ப‌ந்த‌ம் ஏ‌ந்‌தி போரா‌ட்ட‌ம்: ராமதாஸ்!

புதன், 5 நவம்பர் 2008 (15:18 IST)
இல‌ங்கை‌யி‌லபோர் நிறுத்தம் செய்யுமாறு அ‌ந்தநா‌ட்டமத்திய அரசு வலியுறுத்த வேண்டுமென்று கே‌ட்டு‌ககொ‌ண்டு‌ள்ா.ம.க நிறுவனர் ராமதாஸ், இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து சென்னையில் பா.ம.க.வைச் சேர்ந்த இளைஞர்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்துவார்கள் என்றும் இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்று மட்டுமே மத்திய அரசு கூறிவருவதாகவும் போரை நிறுத்த வேண்டும் என்று இலங்கை அரசிடம் வலியுறுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

போர் நிறுத்தம் செய்யுமாறு இலங்கையிடம் மத்திய அரசு கூறவேண்டும் என்றும், இதனை தமிழக முதல்வர் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இலங்கைப் பிரச்சனை குறித்து விவாதிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் தா.பாண்டியன் அழைப்பு விடுத்துள்ள அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பா.ம.க பங்கேற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து சென்னையில் பா.ம.க.வைச் சேர்ந்த இளைஞர்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்துவார்கள் என்றும் இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ராமதாஸ் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்