தங்க நகைக்கு மெருகு போட்டுத் தருவதாக கூறி நகையை கொள்ளையடிக்க முயன்ற பீகார் மாநிலத்தை சேர்ந்த இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு அருகே உள்ள காஞ்சிகோவில் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி. இவரது மனைவி தீபா (22, வீட்டில் இருந்தார். அப்போது வீட்டிற்கு முன் இருபது வயது மதிக்கதக்க இரண்டு வாலிபர்கள் வந்தனர். அவர்கள் தங்க நகைக்கு மெருகு போட்டுத் தருவதாக கூறினர். ஆனால் தீபா கொடுக்க மறுத்துவிட்டார்.
அப்போது கொள்ளையர்கள் தயாராக வைத்திருந்த ரசாயன பவுடரை தீபாவின் நகை மீது வீசினர். இதனால் தீபாவின் கழுத்து எரிச்சலானது. உடனே தீபா சத்தமிட்டார். அருகில் இருந்த உறவினர்கள் அந்த வாலிபர்களை பிடித்து அடித்து விசாரித்ததில் அவர்கள் இருவரும் மெருகு போடுவதாக கூறி நகையை கொள்ளையடிக்க வந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து இருவரையும் சித்தோடு காவல்துறையினரிடம் அவர்கள் ஒப்படைத்தனர். விசாரணையில், பீகாரை சேர்ந்த தருண்குமார் (21), பார்பீர் (20) என தெரிவந்தது.