மின்வெட்டை கண்டித்து கோபியில் அ.இ.அ.தி.மு.க.வினர் ஆர்‌ப்பாட்டம்!

புதன், 5 நவம்பர் 2008 (13:55 IST)
தொடரமின்வெட்டை கண்டித்து கோபியில் அ.இ.அ.தி.மு.க.வினர் ஆர்‌ப்பாட்டம் நடத்தினர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், பவானிசாகர், சத்தியமங்கலம், அந்தியூர், பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மின்வெட்டால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இப்பகுதியில் விசைத்தறிகள் படிப்படியாக மூடப்பட்டு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர்.

விசைத்தறி உரிமையாளர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் இதை கண்டித்து ஈரோடு வடக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் கோபிசெட்டிபாளையத்தில் இன்று காலை ஆர்‌ப்பாட்டம் நடைபெறும் என ‌அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயலர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

இதன்படி கோபிசெட்டிபாளையம் எம்.ஜி.ஆர். சிலை முன்பு இன்று காலை ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு கோபிசெட்டிபாளையம் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பினரு‌ம்வும், அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் தலைமை நிலைய செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கினார். ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.பழனிச்சாமி, வடக்கு மாவட்ட பேரவை செயலாளர் சிந்துரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல் பெருந்துறை ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் பொன்னுதுரை, முன்னாள் நாடாளும‌ன்ற உறு‌‌ப்‌பின‌ர் கே.கே.காளியப்பன், வி.கே.சின்னசாமி, முன்னாள் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌‌ர்கள் கே.ஆர்.கந்தசாமி, பி.சிதம்பரம், ஏ.டி.சரஸ்வதி, ரமணி உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்