வெளிநாட்டு தூதர்களுடன் தமிழக அரசு ஆலோசனை!

புதன், 5 நவம்பர் 2008 (02:03 IST)
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.எஸ். ஸ்ரீபதி, சென்னையில் செவ்வாயன்று வெளிநாட்டு தூதர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

தென் இந்தியாவுக்கான அமெரிக்க தூதரக அதிகாரி ஆன்ட்ரூ சிம்கின், இலங்கை துணை தூதர் அம்சா, சிங்கப்பூர் தூதரக அதிகாரி அஜித்சிங், தென் இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் மைக் கன்னர்ஸ், ஜெர்மனி தூதரக அதிகாரி ரோலண்ட் பிரிட்ரிச் ஹெர்மன், தாய்லாந்து தூதரக அதிகாரி சோபாட் யன்துகிஜ் ஆகியோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பின் போது, சென்னை உட்பட மாநிலம் முழுவதும் வெளிநாடுகளின் முதலீடு குறித்து தலைமை செயலாளர் பேச்சு நடத்தியதாக அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

தவிர பொதுவான விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

முதலீட்டுக்கு ஏற்ற மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால், கூடுதல் முதலீட்டை தமிழகத்திற்கு ஈர்க்கும் நோக்கத்தில் இந்த ஆலோசனை நடத்தப்பட்டதாக கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்