ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

புதன், 5 நவம்பர் 2008 (01:49 IST)
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியின் இணை ஆணையராக (சுகாதாரம்) கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி. ஜோதி நிர்மலா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாடு மாநில வாணிப கழக நிர்வாக இயக்குனர் பி.சீதாராமன், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை முதுநிலை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய எஸ்.எஸ். ஜவகர், தமிழ்நாடு மாநில வாணிப கழக நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி உதவி மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெ.சந்திரகுமார் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் என். மதிவாணனுக்கு பதில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

என். மதிவாணன், சென்னை ஒழுங்கு நடவடிக்கைகள் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். திருவள்ளூர் உதவி ஆட்சியர் ஜெ. உமா மகேஸ்வரி கரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். கரூர் ஆட்சியர் டி.என்.வெங்கடேஷ் வணிக வரிகள் இணை ஆணையராக (வடக்கு) சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதுவரையில் அந்த பொறுப்பில் இருந்த சந்தியா வேணு கோபால் சர்மா கர்நாடக அரசு பணிக்கு செல்கிறார் என்று ஸ்ரீபதி வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த தர்மேந்திர பிரதாப் யாதவ், தமிழ்நாடு அரசு பொதுத் துறை இணை செயலாளராக (சட்டம் மற்றும் ஒழுங்கு) மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பங்கஜ் குமார் பன்சால், வேலூர் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை திட்ட அதிகாரி பூஜா குல்கர்னி சிவகங்கை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (பணிகள்) ஆஷிஷ் சட்டர்ஜி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சிராக மாற்றப்பட்டிருப்பதால், அப்பதவிக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.ஜோதி நிர்மலா மாற்றப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்