சென்னையில் நவம்பர் 6ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு கேட்டுக் கொண்டுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக காங்கிரஸ் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நவம்பர் 6ஆம் தேதி அன்று சென்னை சத்திய மூர்த்தி பவனில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர், மத்திய அமைச்சர் வயலார் ரவி, அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அருண்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் கே.பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
இதில் நானும் மற்றும் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், மணிசங்கர் அய்யர், ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.சுதர்சனம் ஆகியோர் பங்கேற்கிறோம்.
நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ளுமாறு தங்கபாலு கேட்டுக் கொண்டுள்ளார்.