ஜெயலலிதா கார் மீது தா‌க்குத‌ல் : 3 பேர் கைது!

சனி, 1 நவம்பர் 2008 (01:14 IST)
பசு‌ம்பொ‌ன்‌னி‌ல் தேவ‌ர் குருபூஜை‌யி‌‌ல் கல‌ந்து கொ‌ள்ள வ‌ந்த அ.இ.அ.‌‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயல‌‌லிதா‌வி‌ன் கா‌ர் ‌மீது க‌‌ற்க‌ள் ‌வீ‌சிய மூ‌ன்று பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து‌ள்ளன‌ர்.

முத்துராமலிங்க தேவர் குரு பூஜை விழாவில் கலந்து கொள்வ‌த‌ற்காக பசு‌ம்பொ‌ன் வ‌ந்த அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா, தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தபோது திடீரென்று மர்ம கும்பல் ஒன்று கல்வீசி தாக்கி கலவரத்தில் ஈடுபட்டது.

கல்வீச்சில் ஜெயலலிதா வந்த கார் மற்றும் பாதுகாப்புக்கு வந்த காவ‌ல்துறை‌யின‌ரி‌ன் வாகனங்கள் சேதம் அடைந்தன. இது குறித்து மா‌நில‌ங்களவை அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் மலைச்சாமி கமுதி காவ‌ல்‌நிலைய‌த்த‌ி‌ல் புகார் செய்தார்.

அதன்பேரில் காவ‌‌ல்து‌றை‌யின‌ர் வழக்குப்பதிவு செய்து, கல்வீச்சு மற்றும் கலவர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் யார் என்பது குறித்து ‌தீ‌விரமாக விசாரணை செ‌ய்து வ‌ந்தன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் 7 பேர் கைது செய்த காவ‌ல்துறை‌யின‌ர், இதில் 3 பேர் ஜெயலலிதாவின் கார் மீது கல்வீசியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்