பேருந்தை சிறைவைத்த கிராம மக்கள்!

வெள்ளி, 31 அக்டோபர் 2008 (16:51 IST)
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அடங்கிய டி.என். பாளையத்தைச் சேர்ந்த மக்கள், புதுவை சாலை போக்குவரத்துக் கழக பேருந்துகள் இரண்டினை சிறை பிடித்தனர்.

தீபாவளிப் பண்டிகைக்குப் பின்னர் கடந்த 3 நாட்களாக தங்கள் கிராமத்திற்குப் பேருந்துகள் இயக்கப்படாததால், ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், இன்று பேருந்துகளை பிடித்து சிறை வைத்தனர்.

தகவலறிந்த அதிகாரிகளும், காவல்துறையினரும் அங்கு சென்று கிராம மக்களுடன் பேச்சு நடத்தி, மீண்டும் பேருந்துகள் இயக்கப்படும் என்று அளித்த உறுதியின் பேரில் பேருந்துகளை விடுவித்ததாக யுஎன்ஐ செய்தி தெரிவிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்