விஸ்வநாதன் ஆனந்திற்கு முதல்வர் கருணாநிதி பாராட்டு!
வியாழன், 30 அக்டோபர் 2008 (15:51 IST)
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை 3வது முறையாக வென்றுள்ள தமிழக கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்திற்கு, முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்ய வீரர் விளாதிமிர் கிராம்னிக்கிற்கு எதிரான உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் இந்தியாவுக்கு மட்டுமின்றி தமிழகத்திற்கும் சர்வதேச அளவில் ஆனந்த் புகழ் சேர்த்துள்ளார் என்று பாராட்டியுள்ளார்.
கடந்த 2000, 2007இல் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை ஆனந்த் வென்றதை நினைவு கூர்ந்துள்ள முதல்வர், தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், ஆசிகளையும் அவருக்கு தெரிவித்துக் கொள்வதாகக் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.