பெட்ரோல் விலையைக் குறைக்க சு.சாமி கோரிக்கை!

வியாழன், 30 அக்டோபர் 2008 (13:07 IST)
சென்னையில் இன்று அவர் வெளியிட்டுள்ள் அறிக்கையில், ஏற்கனவே கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 148 டாலராக இருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததை அடுத்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலைகளை மத்திய அரசு உயர்த்திய நிலையில், தற்போது சர்வதேச அளவில் விலை குறைந்திருப்பதால், அவற்றின் விலைகளைக் குறைக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சாமி அந்த அறிக்கையில் கோரியுள்ளார்.

தற்போதைய விலை குறைவால், பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை பாதியாகக் குறைக்க வேண்டும் என்றும் அவர் அதில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்