நெல்லை, க‌ன்‌னியாகும‌ரி ‌விரைவு ர‌யி‌ல் நேரம் மாற்றம்!

வியாழன், 30 அக்டோபர் 2008 (00:22 IST)
சென்னையில் இருந்து ராமே‌ஸ்வரத்துக்கு மேலும் ஒரு புதிய ‌விரைவு ரயில் விடப்படுவதையொ‌ட்டி சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்கள் நேரம் நவ‌ம்ப‌ர் 1ஆ‌ம் தே‌தி முதல் மாற்றி அமைக்கப்படுகிறது.

செ‌ன்னை எழு‌ம்பூ‌ரி‌ல் இரு‌ந்து ‌‌இரவு 8 ம‌ணி‌க்கு புற‌ப்ப‌டு‌ம் பொதிகை ‌விரைவு ர‌யில், இனி 8.50 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 9 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.

இரவு 9.15க்கு புறப்பட்ட பாண்டியன் ‌விரைவு ர‌யி‌ல் இனி 9.40 மணிக்கு புறப்ப‌ட்டு மறுநாள் காலை 6.35 மணிக்கு மதுரை சென்றடையும்.

எழும்பூர்- சேலம் ‌விரைவு ரயில் வழக்கம் போல் இரவு 11.20க்கு புறப்படும். ஆனால் சேலத்துக்கு காலை 5.45க்கு பதிலாக 6.05க்கு சென்றடையும்.

மறுமார்க்கத்தில் இந்த ரயில் சேலத்தில் 9.45க்கு பதில் 9 மணிக்கு புறப்ப‌ட்டு சென்னை எழும்பூருக்கு அதிகாலை 4 மணிக்கு பதில் 4.50க்கு வந்து சேரும்.

இதுவரை 8.50 மணிக்கு புறப்பட்ட நெல்லை ‌விரைவரயில், இனி மேல் 9.15க்கு புறப்படும். காலை 8.50 மணிக்கு நெல்லை சென்றடையும். எழும்பூர் சென்னை- மங்களூர் ‌விரைவு ர‌யி‌ல் இரவு 9.40க்கு பதில் 10 மணிக்கு புறப்படும்.

கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூர் வரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரியில் இதுவரை 5.15 மணிக்கு புறப்பட்டது. இனி 5.20க்கு புறப்படும். எழும்பூருக்கு காலை 6.45-க்கு பதில் 6.50க்கு வந்து சேரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்