இயக்குனர்கள் சீமான், அமீருக்கு நிபந்தனை பிணைய விடுதலை!

புதன், 29 அக்டோபர் 2008 (20:21 IST)
இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களு‌க்கு ஆதரவாக ‌திரையுல‌கின‌ர் நட‌த்‌திய கூ‌ட்ட‌த்‌தி‌ல் பிரிவினையைத் தூண்டு‌ம் ‌வித‌த்‌தி‌ல் பே‌சியதாக கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் இருந்த வந்த இயக்குனர்கள் சீமான், அமீருக்கு நிபந்தனையுடன் பிணைய விடுதலை அளிக்கப்பட்டுள்ளது!

தங்களை பிணையில் விடுவிக்கக் கோரி ராமநாதபுரம் அமர்வு நீதிமன்றத்தில் சீமான், அமீர் சார்பாக வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இன்று இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி மாயாண்டி, சில நிபந்தனைகள் விதித்து இயக்குனர்கள் சீமான், அமீருக்கு பிணயை விடுதலை அளித்தார்.

பிணைய விடுதலை குறித்து கூறிய அமீர் வழக்கறிஞர் லஜபதிராய், மதுரை நீதிமன்றத்தில் கடவுச் சீட்டை சமர்ப்பிக்க வேண்டும் என்ற சில நிபந்தனையுடன் பிணைய விடுதலை அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்