பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!
புதன், 29 அக்டோபர் 2008 (12:38 IST)
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 101-வது ஜெயந்தி விழா மற்றும் 46-வது குருபூஜை விழா நேற்று தொடங்கியது. இந்த விழாவின் 2ஆவது நாளான இன்று பசும்பொன்னில் உள்ள தேவரின் நினைவிடத்தில் மத்திய-மாநில அமைச்சர்கள் உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
திமுக சார்பில் அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், சுப. தங்கவேலன், சாத்தூர் ராமச்சந்திரன், பெரிய கருப்பன், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோரும், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும் மலர் அஞ்சலி செத்துகினார்கள். காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான கார்த்திக், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
தேவர் ஜெயந்தியின் முதல்நாளான நேற்று ஆன்மீக விழாவாகவும், இன்று 2-ம் நாள் விழா அரசியல் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.
3-ம் நாளான வியாழனன்று (நாளை) குருபூஜை விழாவாக கொண்டாடப்படுகிறது. விழாவில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு தேவர் சமாதியில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.