ஆதார‌ம் இரு‌ந்தா‌‌ல் கைது செய்யலாம் : திருமாவளவன்!

புதன், 29 அக்டோபர் 2008 (05:08 IST)
''இந்திய இறையாண்மைக்கு எதிராக நான் பேசியிருந்தால், அடிப்படை ஆதாரம் இருந்தால் எ‌ன்னை கைது செ‌ய்ய முதலமைச்சரோ, தமிழக அரசோ தயக்கம் காட்ட வேண்டிய தேவையில்லை'' எ‌ன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
சென்னையில் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், இந்திய அரசு ஈழத் தமிழர் பிரச்சனையில் தலையிட்டு போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டா‌ல் தமிழக நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் பதவி விலகுவோம் என்று 28ஆ‌ம் தேதிவரை காலக்கெடு விதிப்பதாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக மத்திய அயலுறவு‌த்துறை அமை‌ச்ச‌ர் பிரணாப் முகர்ஜி முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து பேசியது அனைத்து‌க்கட்சி கூட்டத்திற்கு கிடைத்த வெற்றி. அவர்கள் பேசியத் தகவல் முழுவதுமாக வெளியிடப்படவில்லை. இந்தநிலையில் விரைவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

சென்னையில் நடந்த மனிதச்சங்கிலி தமிழக மக்கள் தமிழ்ஈழத்திற்கு ஆதரவாக இருப்பதாக அமைந்தது. தமிழக நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் பதவி விலகுவது நல்லது அல்ல. அதே நேரம் இந்த முடிவை கைவிடாமல், இலங்கையில் போர் நிறுத்தம் செய்யும் வரை நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் பதவி விலகுவதை தள்ளிப்போட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

800 டன் உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்ட பொருட்களை ஈழத்தமிழர்களுக்கு அனுப்ப உறுதிஅளிக்கப்பட்டுள்ளது. இதுவும் வெற்றிதான்.
தனிமனிதனுக்கு கருத்து சுதந்திரம் உள்ளது. அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா உள்ளிட்ட பலர் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுப்பி வருகிறார்கள்.

இந்திய இறையாண்மைக்கு எதிராக நான் பேசியிருந்தால், அடிப்படை ஆதாரம் இருந்தால் முதலமைச்சரோ, தமிழக அரசோ தயக்கம் காட்ட வேண்டிய தேவையில்லை. தகவல் கொடுத்தால் சிறைவாசலில் நிற்க தயாராக இருக்கிறேன். இதனை முதலமைச்சருக்கு தோழமையோடு தெரிவித்துக்கொள்கிறேன்'' எ‌ன்று தொ‌ல்.‌திருமாவளவ‌ன் கூ‌றினா‌ர்.